யூகிரேனில் இடம்பெறும் யுத்தத்தில் எதிர்பார்த்ததற்கும் அதிக அளவில் ரஷ்ய tanks அழிந்து இருந்தன. அவற்றில் இருந்த படையினரும் பலியாகி இருந்தனர். இவ்வாறு ரஷ்ய tanks அழிந்தமை ரஷ்யாவின் யுத்த இழப்புகளுக்கும், பின்னடைவுக்கும் காரணமாக அமைத்தது. ரஷ்யா யுகிரேனின் தலைநகர் கியேவ்வை தாக்கும் முயற்சியையும் கைவிட்டு இருந்தது.
தலைநகரை தாக்குவது இல்லை என்று ரஷ்யா அறிவிக்க இதுவே காரணமாக இருந்திருக்கலாம். இதுவே பெருமளவு ரஷ்ய படையினர் அழிய காரணமாகவும் இருந்திருக்கலாம். பலநூறு ரஷ்ய tanks ஆரம்பத்தில் அழிந்ததாக கூறப்படுகிறது. Tanks களை களத்தில் இருந்து பின்வாங்கிய பின் ரஷ்ய தரப்பு அழிவுகள் குறைந்து இருந்தன.
இவ்வாறு ரஷ்ய tanks பெருமளவில் அழிய காரணம் எதிரியின் தாக்குதல் அல்ல என்றும், பதிலாக ரஷ்ய tanks களின் கட்டமைப்பே (design) காரணம் என்றும் தற்போது நம்பப்படுகிறது. யுத்தத்தில் அழிந்த ரஷ்ய tanks படங்கள் இதனை உறுதி செய்கின்றன.
அழிந்துபோன ரஷ்ய tanks களின் பெரும்பாலானாவை தமது மூடி போன்ற வடிவம் கொண்ட மேல் பாகத்தை இழந்து உள்ளன. வெளியே இருந்து தாக்கும் விசை இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தாது. உள்ளுக்கு இருந்து வெளிநோக்கி தாக்கும் விசையே இவ்வாறு மூடி போன்ற பாகத்தை வெளிநோக்கி தள்ளி உடைக்கும்.
ரஷ்ய tanks தமக்கு தேவையான எறிகணைகளை tank கின் உள்ளேயே கொண்டிருக்கும். சில tanks சுமார் 40 எறிகணையை கொண்டிருக்கும். எதிரி ஏவும் சிறிய குண்டுகள் ஏற்படுத்தும் அதிர்வு உள்ளே உள்ள அதிக பலம் கொண்ட எறிகணைகளை அதிரவைத்த வெடிக்க வைத்துள்ளன என்று கருதப்படுகிறது. இதே அறைக்குள் இருக்கும் படையினரும் கூடவே பலியாகினர்.
இந்த உண்மையை அமெரிக்கா 1990ம் ஆண்டு சதாமுடன் செய்த சண்டையின்போது அறிந்து இருந்தது. சதாம் கைவசம் இருந்த ரஷ்ய தயாரிப்பு tanks எல்லாம் இவ்வாறே அழிந்து இருந்தன. பின்னர் அமெரிக்கா எறிகணைகளுக்கு தனியாக பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை தமது M1 Abrams போன்ற tanks களில் வைக்க ஆரம்பித்தனர். தேவைப்படும்போது பெட்டகத்தில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து பயன்படுத்துவர்.
தாம் தயாரித்த சதாமின் tanks ஏன், எவ்வாறு பாதிப்பை அடைந்தன என்பதை ரஷ்யா அக்காலத்தில் ஆராந்து இருக்கவில்லை போலும். ரஷ்யா 1990ம் ஆண்டுகளில் வறுமையில் இருந்தது.
இது உண்மை என்றால், ரஷ்யா விரைவாக புதிய tanks களை தயாரிக்க நேரிடும். புதிய tanks வரும்வரை தமது ஏவுகணைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்.