லண்டனுக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதகம்

லண்டனுக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதகம்

லண்டன் மாநகரத்துக்கு Brexit எதிர்பார்த்ததிலும் அதிக பாதக விளைவுகளை அளித்துள்ளது என்கிறது New Financial குழுவின் ஆய்வு ஒன்று. வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த ஆய்வின்படி 440 நிறுவனங்கள் லண்டன் நகரில் இருந்து தமது பிரதான தளங்களை ஐரோப்பாவுக்கும், Dublin நகருக்கும் நகர்த்தி உள்ளன.

மேற்படி நகர்வுக்கு உள்ளான சொத்துக்களின் மொத்த பெறுமதி $1.4 டிரில்லியன் பவுண்ட்ஸ் என்றும் கூறப்படுகிறது. கூடவே 7,400 தொழில்களும் லண்டன் நகரை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு இந்த அமைப்பு மேற்கொண்ட கணிப்பின்படி 269 நிறுவனங்களே தாம் Brexit இடம்பெற்றால் லண்டன் நகரை விட்டு வெளியேறுவோம் என்று கூறி இருந்தன.

நகர்ந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வங்கி, முதலீடு, காப்புறுதி ஆகிய துறைகளில் முன்னணி வகிப்பவை. அவற்றுள் சுமார் 126 Asset Management நிறுவனங்களும், 109 Financial நிறுவனங்களும், 81 வங்கிகளும், 65 காப்புறுதி நிறுவனங்களும் அடங்கும்.

சொத்துக்களின் அடிப்படையில் நகர்வில் முன்னணியில் உள்ளவை:
Deutsche Bank, Frankfurt நகருக்கு: 250 பில்லியன் பவுண்ட்ஸ்
JP Morgan, Frankfurt நகருக்கு: 176 பில்லியன் பவுண்ட்ஸ்
Barclays Bank, Dublin நகருக்கு: 166 பில்லியன் பவுண்ட்ஸ்
Bank of America, Dublin, பாரிஸ்: 95 பில்லியன் பவுண்ட்ஸ்
Morgan Stanley, Frankfurt நகருக்கு: 90 பவுண்ட்ஸ்
Goldman Sachs, Frankfurt நகருக்கு: 50 பில்லியன் பவுண்ட்ஸ்
Citi Bank, Frankfurt நகருக்கு: 45 பில்லியன் பவுண்ட்ஸ்
UBS, Frankfurt நகருக்கு: 28 பில்லியன் பவுண்ட்ஸ்

எண்ணிக்கை அடிப்படியில் நகர்வில் முன்னணியில் உள்ளவை:
Dublin நகருக்கு: 135 நிறுவனங்கள்
பாரிஸ் நகருக்கு: 102 நிறுவனங்கள்
Luxembourg நகருக்கு: 95 நிறுவனங்கள்
Frankfurt நகருக்கு: 63 நிறுவனங்கள்
Amsterdam நகருக்கு: 48 நிறுவனங்கள்