லண்டன் லாரியில் மரணித்தோர் அனைவரும் வியட்னாமியர்

Essex

அண்மையில் பிரித்தானியா சென்ற லாரி கொள்கலம் ஒன்றுள் மரணித்தோர் அனைவரும் வியட்னாம் நாட்டவர் என்று தெரியவந்துள்ளது. முதலில் இவர்கள் சீனர்கள் என்று கருதப்பட்டு இருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகள் மரணித்தோர் வியட்னாம் நாட்டினர் என்பதை உறுதி செய்துள்ளது.
.
மரணித்தோரின் சில குடும்ப உறவினர்கள் ஏற்கனவே மரணித்த தமது உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டு, போலீசாருக்கும் தேவையான தகவல்களை வழங்கி உள்ளனர்.
.
உறவினர் வழங்கிய தரவுகளின்படி மரணித்தோருள் Pham Thi Tra My என்ற 26 வயது பெண்,  Le Van Ha என்ற 30 வயது ஆண் ஆகியோரும் அடங்குவர்.
.
இந்த வாகனத்தின் சாரதியான Maurice Robinson என்பவரும், Eamonn Harrison என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். நெதர்லாந்து குடியிருப்பாளர்களான  Ronan Hughes, Christopher Hughes ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
.