லிபியாவில் தொடரும் மேற்கின் கபட நாடகம்

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் லிபியா (Libya) சண்டையில் ஈடுபட்டுள்ள வெளிநாடுகளுக்கு சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்த எச்சரிக்கை லிபியா சண்டைக்கு உதவுவோர் மீது பொருளாதார தடைகள் விதிக்க உள்ளதாகவும் கூறி உள்ளது.
.
இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் லிபியா சண்டைக்கு உதவும் பின்னணி நாடுகளில் பிரான்சும் ஒன்று. மேற்படி நாடுகள் விடுத்த அறிக்கையில் வெளிநாடுகளின் பங்கை குறிப்பிட்டு, அவற்றை சாடி இருந்தாலும், அவ்வாறு லிபியாவில் தலையிடும் நாடுகள் எவை என்பதை குறிப்பிடவில்லை. அவர்களுக்கே தெரியும் அவ்வாறு குறிப்பிட்டால், அவர்களின் கபடம் வெளிவந்துவிடும் என்று.
.
2011 ஆம் ஆண்டு மத்தியகிழக்கில் உருவான Arab Spring என்ற மக்கள் எழுச்சியை சாதகமாக  பயன்படுத்தி NATO கடாபியை துரத்தி, படுகொலை செய்திருந்தது. பின்னர் அங்கு நிலைமைகள் கைமீற, நேட்டோ அங்கிருந்து மெல்ல நழுவி இருந்தது. அதை தொடர்ந்து பல வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுகடளுடன் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது.
.
இறுதியில் ஐ.நா. ஆதரவு கொண்ட Government of National Accord (GNA) க்கு துருக்கி ஆதரவு வழங்க முன்வந்தது. கூடவே இத்தாலி, Qatar போன்ற நாடுகளும் GNA க்கு ஆதரவு வழங்குகின்றன.
.
அதேவேளை தமது ஆளுமையை லிபியாவுள் செலுத்தும் நோக்கில் UAE, எகிப்த், பிரான்ஸ் போன்ற நாடுகள் லிபியாவின் முன்னாள் ஜெனரல் ஆனா Haftar என்பவரை ஆதரிக்கின்றன.
.
நீண்ட காலமாக Haftar அணி வெற்றிகளை அடைந்து வந்தபோது மேற்கு நாடுகள் பாராமுகம் கொண்டு இருந்தன. அனால் துருக்கியின் அதிக உதவிகள் காரணமாக GNA அண்மை காலங்களில் பெரு வெற்றிகளை அடைந்து வந்தது. இதனால் பயம் கொண்ட எகிப்த் ஒருதலை யுத்தநிறுத்தம் ஒன்றை அண்மையில் அறிவித்து இருந்தது. அது அவர்கள் தரப்பின் தோல்விகளை நிறுத்தவில்லை.
.
இந்நிலையிலேயே ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தமது பொருளாதார பலத்தை பயன்படுத்த முனைகின்றன. இவர்களின் நோக்கம் துருக்கியை தண்டிப்பதே.
.