லிபியாவில் மீண்டும் சண்டை உக்கிரம்

Libya

லிபியாவில் மீண்டும் சண்டை உக்கிரம் அடைகிறது. ஜெனரல் Khalifa Hifter தலைமையிலான Libyan National Army என்ற ஆயுத குழு அந்நாட்டின் தலைநகர் Tripoli நோக்கி நகருகிறது. இந்த அணி, தலைநகரை பிடித்து, லிபியாவின் ஆட்சியை கைப்பற்ற முனைகிறது என்று நம்பப்படுகிறது. அதேவேளை தலைநகரில் உள்ள ஐ.நா. ஆதரவு கொண்ட இடைக்கால அரசை காப்பாற்ற ஐ.நாவும் சில மேற்கு நாடுகளும் முனைகின்றன.
.
Khalifa Hifter 1969 ஆம் ஆண்டு கடாபியின் தலைமையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பில் முக்கிய பங்கு கொண்டிருந்தவர். கடாபிக்கு நெருங்கிய இவர் 1987 ஆம் ஆண்டில் Chad என்ற நாட்டுடனான யுத்தத்தின்போது Chad இராணுவத்தால் பிடிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டளவில் இவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
.
அமெரிக்காவில் வாழ்ந்த இவர் CIA அமைப்புடன் இணைந்து, கடாபிக்கு எதிராக செயல்பட்டார். 2011 ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையில் கடாபி விரட்டப்பட்டு படுகொலை செய்யப்பட, லிபியா வந்த Khalifa Hifter லிபியாவில் தனது படையை வளர்க்க ஆரம்பித்தார்.
.
Khalifa Hifter லிபியாவின் கிழக்கு பகுதில் ஆதிக்கம் செலுத்த, Government of National Accord என்ற மற்றை பலமான ஆயுத குழுகளின் கூட்டணி மேற்கே ஆதிக்கம் செலுத்துகிறது. Sirte என்ற நகரை அண்டிய பகுதியில் அவ்வப்போது ISIS அமைப்பும் தாக்குதல்களை நிகழ்த்துகிறது.
.
கடாபியின் பின்னர் லிபியாவில் நிலையான ஆட்சி என்றைக்குமே இருந்திருக்கவில்லை.

.