வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்

வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்

கடந்த சில தினங்களாக தாய்லாந்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றை தடை செய்ய அரசும் முயன்று வருகின்றது. சில பகுதிகளில் தற்போது பொது போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளன.

ஆர்ப்பாட்டம் செய்வோரின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்கில் போலீசார் 77 ரயில் நிலையங்களை மூடி உள்ளனர். அத்துடன் வீதி தடைகளையும் அமைத்து உள்ளனர். ஆனாலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் தொகை கடந்த 4 தினங்களாக அதிகரித்து வருகின்றது.

ஆர்ப்பாட்டம் செய்வோர் முன்னாள் இராணுவ அதிகாரியான பிரதமர் Prayuth Chan-ocha வை பதவி விலகும்படி கூறுகின்றனர். அத்துடன் தாய்லாந்து அரசரினதும், இராணுவத்தினதும் பங்கை ஆட்சியில் குறைத்து, சனநாயகத்தை நடைமுறை செய்ய கேட்டுள்ளனர்.

அதேவேளை தாய்லாந்து அரசர் King Maha Vajiralongkorn ஜெர்மனியில் வசித்துக்கொண்டு தாய்லாந்தை ஆழ்கிறாரா என்று ஜேர்மன் பாராளுமன்றில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலளித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் Heiko Maas தாம் அதற்கு இடமளிக்க முடியாது என்றுள்ளார். தாய்லாந்து அரசர் பெரும்பாலாக ஜெர்மனியிலேயே வசித்து வருகிறார். அவருக்கு ஜெர்மனியின் Bavaria பகுதியில் ஆடம்பர மனை ஒன்று உண்டு. இவரிடம் சுமார் $70 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தனது தந்தையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகளுக்கு Vajiralongkorn தாய்லாந்து சென்று இருக்கையிலேயே ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து உள்ளன.

முற்காலங்களில் இடம்பெற்ற பல ஆர்ப்பாட்டங்களை தாய்லாந்து இராணுவம் அடக்கி இருந்தது. அங்கே இராணுவத்தை அரசர் பாதுகாக்க, அரசர் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றது.