வீட்டுக்கு கீழே 45 விச பாம்புகள் குடியிருப்பு

Texas

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Abilene நகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு கீழே 45 rattle snake என்ற வகை நச்சு பாம்புகள் குடியிருந்துள்ளன. ஒரே இடத்தில் இவ்வளவு பாம்புகள் அகப்பட்டது வீட்டுக்காரரை வியக்க வைத்துள்ளது.
.
மேற்படி வீட்டுக்காரர் தனது தொலைக்காட்சி சரியா இயங்காததால் அதன் cable ஐ சரிபார்க்க முயன்றுள்ளார். அப்போது அவரின் வீட்டுக்கு கீழே சில rattle snake வகை பாம்புகள் இருப்பதை அறிந்து Big Country Snake Removal என்ற நிறுவனத்தின் பாம்பு பிடிக்கும் அதிகாரிகளை அழைத்துள்ளார்.
.
பாம்பு பிடிக்கும் அதிகாரிகள் அங்கு 45 rattle snake பாம்புகள் இருப்பதை அறிந்துள்ளனர். அவர்கள் அனைத்தையும் பிடித்து சென்றுள்ளனர்.
.
Rattle snake வகை பாம்புகள் வட மற்றும் தென் அமெரிக்காவில் உள்ளவை. பாலைவனம் போன்ற வெப்பநிலை கொண்ட பகுதிகளில் இவை வாழும். இவை மிரளும் போது, எதிரியை எச்சரிக்க தமது வாலின் நுனி பகுதியை அதிர வைக்கும். அந்த அதிர்வு எழுப்பும் ஒளியாலேயே இவை rattle snake என்ற பெயரை பெற்றன.
.
மேற்படி வீடு மிகவும் சுத்தமாக இருந்தும் பாம்புகள் குடி புகுந்தமை அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்பகுதி காலநிலை காரணமாக வீடுகள் நிலத்தில் இருந்து சில அடிகள் உயரத்திலேயே கட்டப்படும். அதனால் வீட்டுக்கு கீழே பாவனை அற்ற பகுதி ஒன்று இருக்கும்.
.