வெனிசுவேலா சென்றன 2 ரஷ்ய இராணுவ விமானங்கள்

Venezuela

நேற்று சனிக்கிழமை 2 ரஷ்ய இராணுவ விமானங்கள் வெனிசுவேலா (Venezuela) சென்றுள்ளன. Ilyushin IL-62 விமானம் ஒன்றில் 100 ரஷ்ய இராணுவத்தினரும், Antonov 124 வகை விமானத்தில் சுமார் 35 தொன் இராணுவ தளபாடங்களும் சென்றுள்ளன என்று கூறப்படுகிறது.
.
தமக்கு கட்டுப்படாத வெனிசுவேலா அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமன்றி, அந்நாட்டு எதிரணிக்கு ஆதரவும் வழங்கியும் வருகிறது. அத்துடன் தேவைப்பட்டால் அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியுள்ளார்.
.
அமெரிக்காவின் ஆதரவுடன் எதிர்கட்சி தலைவர் Guaido தன்னை தானே இடைக்கால ஜனாதிபதி என்றும் கூறியிருந்தார். அதை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் ஆதரித்தன. ஆனால் ரஷ்ய, சீனா ஆகிய நாடுகள் தற்போதை அரசையே ஆதரிக்கின்றன.
.
ரஷ்யா அவ்வப்போது வெனிசுவேலா அரசுக்கு உதவிகள் செய்து வருகிறது. சனிக்கிழமை ரஷ்ய செய்துகொண்ட பயணத்தின் நோக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை.
.
கடந்த டிசம்பர் மாதமும் ரஷ்யா வெனிசுவேலாவுக்கு இரண்டு குண்டு வீச்சு விமானங்களை பயிற்சிக்காக அனுப்பி இருந்தது.

.