ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்?

ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்?

இன்று ஞாயிரு திராவிட முன்னேற்ற கழக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி டில்லி பயணிக்கும் நோக்கில் சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த Central Industrial Security Force (CISF) அதிகாரி ஹிந்தியில் உரையாடி உள்ளார். ஹிந்தி தெரியாத கனிமொழி தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உரையாடும்படி கேட்டுள்ளார்.

தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறிய கனிமொழியை ஹிந்தி தெரியாத நீர் ஒரு இந்தியரா என்று கேட்டுள்ளார் CSSF அதிகாரி. இந்த விசயத்தை கனிமொழி PTI போன்ற இணையங்களில் பரப்பி உள்ளார்.
CISF மேற்படி விசயத்தை விசாரணை செய்ய முன்வந்துள்ளது. அதற்கு கனிமொழி நன்றியும் கூறியுள்ளார்.

அண்மையில் மோதி அரசு மூன்று மொழி திட்டத்தை பாடசாலைகளுக்கு National Education Policy (NEP) 2020 மூலம் பரப்ப முனைந்துள்ளது. மூன்றாம் மொழி ஹிந்தியாக இருக்கவேண்டும் என்று NEP நேரடியாக கூறாவிட்டாலும், தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்து ஹிந்தியே அமையும் என்பது மோதி அரசின் உள்நம்பிக்கை.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இலகுவில் ஹிந்தி ஆசிரியர்கள் அமர்த்தலாம். ஆனால் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் அப்பால் ஆசிரியர்களை தேவையான அளவில் மாநிலம் எங்கும் அமர்த்துவது இலகல்ல. மாணவர்களும் தம் நலன் கருதி இன்னோர் மாநில மொழியை பயில்வதை தவிர்த்து ஹிந்தியையே மூன்றாம் மொழியாக பயிலுவர்.

தமிழ்நாடு தற்போது பழைய NEP திட்டத்துக்கு அமைய இருமொழி கொள்கையிலேயே உள்ளது.