​ஈஸ்டர் தாக்குதல் செய்திகளில் தொடர்பில்லா படங்கள் ​

EasterAttack

கடந்த ஈஸ்டர் தினத்தன்று ​இலங்கையில் உள்ள 3 கிறீஸ்தவ தேவாலயங்களிலும், 3 ஹோட்டல்களிலும் நடாத்திய தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்த பல செய்திகளில் பல பழைய, தாக்குதலுக்கு தொடர்பில்லாத படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இஸ்லாமிய பெண் ஒருவரின் படத்தையும் இலங்கை அரசு மரணித்த தற்கொலை பெண் என்று தவறாக கூறி, பின் வருத்தத்தையும் தெரிவித்து உள்ளது.

.
இலங்கையில் இருந்து அமெரிக்கா குடிபெயர்ந்திருந்த பெற்றாகளுக்கு அமெரிக்காவில் உள்ள Baltimore என்ற நகரில் பிறந்த Amara Majeed என்ற பெண்ணின் படத்தை இலங்கை அரசு ஈஸ்டர் தாக்குதல்காரருள் ஒருவரான Abdul Cader Fathima Khadiya என்று ஆரம்பத்தில் கூறி இருந்தது. தவறை சுட்டிக்காட்டியபோது இலங்கை அரசு தவறை திருத்தி உள்ளது.
.
2006 ஆம் ஆண்டு கெப்பிடிஹெலாவா என்ற இடத்தில் புலிகளின் தாக்குதலுக்கு இரையான பஸ் ஒன்றில் பயணித்து மரணத்தோரின் மரண ஊர்வல படங்களையும் சில செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் மரண ஊரவலங்கள் என்று காட்டி உள்ளன. 2006 ஆம் ஆண்டின் படங்களை பின்னரும் இணையத்தில் காணலாம்:
.

2006 ஆம் ஆண்டு கெப்பிடிஹெலாவா படங்கள்

.
Facebook போன்ற இணையங்கள் தவறான படங்கள் பரவ முக்கிய காரணமாக உள்ளன.
.