அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் ரம்ப் அரசு அடுத்து சீனாவின் Semiconductor Manufacturing International Corporation (SMIC) என்ற chip தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சாதாரண மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை என்றாலும், அவர்களில் smart phone, கணனி போன்ற இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் SMIC தயாரிப்புகளை கொண்டவை.

பல மேற்கு நாடுகளின் தொழிநுட்ப நிறுவனங்கள் SMIC க்கு தமது பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும், SMIC யின் பொருட்களை கொள்வனவு செய்பவர்களாகவும் உள்ளன. அதனால் SMIC மீது தடை வருமானால் அது மொத்த semiconductor உலகையே பாதிக்கும்.

அமெரிக்காவின் மிரட்டல் செய்தியால் இன்று திங்கள் SMIC நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி ஹாங் காங் பங்குச்சந்தையில் 23% ஆல் வீழ்ந்து உள்ளது.

Apple, Motorola, Samsung போன்ற smart phone கள் எல்லாம் தம்முள்ளே Qualcomm chip ஐ கொண்டுள்ளன. இவற்றை தயாரிப்பது SMIC நிறுவனமே.