அமெரிக்காவின் நூற்றாண்டு சீமெந்து, சீனாவில் 3 வருடங்களில்

cement

அண்மைய Washington Post கட்டுரை ஒன்றின்படி அமெரிக்கா கடந்த நூற்றாண்டுகளுக்கு அதிகமாக காலத்தில் பாவனை செய்த சீமெந்து அளவைவிட அதிகம் சீமெந்தை சீனா 2011 முதல் 2013 வரையான 3 வருடங்களில் கொள்வனவு செய்துள்ளதாம். இந்த அதீத கொள்வனவு சீனாவின் அதீத வர்த்தக கட்டட மற்றும் குடியிருப்பு கட்டுமான வளர்ச்சியை காட்டுகிறது.
.
1901 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா 4.5 gigatons (4500 megatons) சீமெந்தை பாவனை செய்துள்ளது. ஆனால் சீனா 2011 முதல் 2013 வரையான 3 வருடத்துள் 6.6 gigatons சீமெந்தை கொள்வனவு செய்துள்ளது.
.
சீனாவில் வருடம் ஒன்றில் சுமார் 200 மில்லியன் மக்கள் நகரங்களை நோக்கி குடி பெயர்கிறார்கள். 1978 ஆம் ஆண்டளவில் 20% இக்கும் குறைவான சீனரே நகர்களில் வாழ்ந்திருந்தனர். ஆனால் 2020 ஆம் ஆண்டளவில் 60% இக்கும் அதிகமான சீனர் நகர்களில் வாழ்வார்.
.
சீனாவின் 221 நகர்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இதனுடன் ஒப்புடுகையில் ஐரோப்பாவில் 35 நகர்கள் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களை கொண்டுள்ளன.
.

அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர் அதிகமான பகுதிகளில் பெருமளவு வீடுகள் மரத்தால் கட்டப்படும் என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம்..