அமெரிக்காவின் $20 தாளில் கருப்பின Tubman

Tubman

அமெரிக்க நாணய தாள்களை தற்போது அலங்கரிப்பது வெள்ளை இன முன்னாள் தலைவர்களே. அமெரிக்காவின் $1 தாளில் இருப்பது George Washington (முதலாவது ஜனாதிபதி), $5 தாளில் இருப்பது Abraham Lincoln, $10 தாளில் இருப்பது Alexander Hamilton, $20 தாளில் இருப்பது Andrew Jackson, $50 தாளில் இருப்பது Ulysses Grant, $100 தாளில் இருப்பது Benjamin Franklin.
.
சிறுபான்மை இனங்களை உள்ளடக்கவும், அமெரிக்காவில் கருப்பு இனத்தின் பங்களிப்பை அடையாளப்படுத்தவும் அமெரிக்கா Harriet Tubman (1822 – 1913) என்ற கருப்பு இன பெண்ணின் படத்தை $20 தாளில் பதிக்கவுள்ளது. அதாவது எதிர்காலத்தில் வெளியிடப்படும் $20 தாளில் Andrew Jackson படத்துக்கு பதிலாக Harriet Tubman படம் இருக்கும்.
.
இங்கு முக்கிய விடயம் என்னெவென்றால் $20 தாளில் தற்போது இருக்கும் அமெரிக்காவின் 7வது ஜனாதிபதியான Andrew Jackson (1767 – 1845) சுமார் 150 அடிமைகளுக்கு உரிமையாளராகவும் இருந்தவர். இந்த அடிமைகள் இவரின் 1050 ஏக்கர் பரப்புக்கொண்ட Hermitage தோட்டத்தில் தொழில் புரிந்திருந்தனர்.
.

அடிமையாக இருந்த Harriet Tubman தப்பியோடி, பின் பல அடிமைகளை தப்பியோட உதவியவர். அப்போது அமெரிக்காவின் தென்பகுதி வெள்ளையர் அடிமைகளை உரிமை கொள்வதை சட்டப்படி ஆதரித்து இருந்திருந்தாலும், வடக்கு வெள்ளையர் அடிமைகளை உரிமை கொள்வதை கைவிட்டு இருந்தனர். வடக்கு வெள்ளையர் தெற்கின் அடிமைகளை பாதுகாக்க தொடங்கினர்.
.