அமெரிக்காவில் கைதான Devyani ஐ.நா.வுக்கு மாற்றம்?

Devyani

அமெரிக்காவின் நியூ யோர்க் (New York) நகரில் நிலைகொண்டுள்ள இந்தியாவின் deputy consul general Devyani Khobragade (வயது 39) இந்த மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். தனது வீட்டில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட Sangeeta Richard இக்கு குறைந்த ஊதியம் வழங்கியமை, இவரை அழைத்துவரும் விசா விண்ணப்பத்தில் தவறான தரவுகளை (false documents) கொடுத்திருந்தமை போன்ற குற்றசாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் இப்போது $250,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்படி மிக குறைந்த ஊதியம் $9.75/hr ஆக இருக்க இவர் தனது 2 பெண் பிள்ளைகளை (வயது 4, 7) பராமரிக்கும் பணியாளருக்கு சுமார் $3.31 மட்டுமே வழங்கியுள்ளார். அத்துடன் வாராந்த 40 மணித்தியாலங்களுக்கு பதிலாக இந்த பணியாளர் வாரம் ஒன்றுக்கு சுமார் 90 முதல் 100 மணித்தியாலங்கள் வரை வேலை செய்துள்ளார். மொத்த நேரத்தை கணிப்பிடின், இந்த பணியாளரின் ஊதியம் சுமார் $1.50/hr மட்டுமே. அதேவேளை Devyani இந்தியாவின் பெண்களின் உரிமைக்காக மேடைகளில் பேசுபவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தற்போது Sangeeta வின் குடும்பத்தை அமெரிக்கா பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து வெளியே எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா தரப்பு இதனால் விசனம் கொண்டுள்ளது. அமெரிக்கா Devyani யை அவமாப்படுத்தியுள்ளதாக இந்தியா கூறுகிறது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தாம் சராசரி அமெரிக்கரை கையாளும் முறைக்கும் மேலாக மதிப்பு கொடுத்திருந்ததாக கூறுகிறது. இந்த சம்பவத்தின்பின் இந்தியாவில் சில அமெரிக்க தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளன.

Devyani யை தற்போது இந்தியா தனது ஐ.நாவின் பணிக்கு மாற்றம் செய்துள்ளதாக New York Times கூறுகிறது. இந்த பதவி மாற்றத்தை Ban Ki-Moon க்கு இந்தியாவின் அமெரிக்காவுக்கான தூதுவர் Asoke Mukerji அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் Devyaniக்கு அதிக diplomatic பாதுகாப்பை சேர்க்கலாம் என இந்தியா எண்ணக்கூடும். இதை அமெரிக்கா ஆதரிக்குமா என்பதை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.

படம்: New York Times