அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது Emirates

Dubai

Dubaiயின் Emirates விமான சேவை தனது அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இஸ்லாமிய நாட்டவர் மீதும், அங்கிருந்து அமெரிக்கா வருபவர் மீதும் பெரும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய பின், Emirates விமான சேவை மூலம் அமெரிக்கா செல்வோர் தொகை குறைந்துள்ளது. அதன் விளைவாகவே Emirates தனது சேவைகளை குறைத்துள்ளது.
.
Dubai நகரில் இருந்து நேரடியாக அமெரிக்கா பயணிப்பவர் iPad, laptop போன்ற உபகாரணங்களை தம்முடன் வைத்திருப்பதையும் (carry-on) அமெரிக்கா தடை செய்திருந்தது.
.
மே மாதம் முதல் தினசரி சேவைகளை கொண்டிருந்த Fort Lauderdale (Florida), Orlando (Florida) ஆகிய நகர்களுக்கான சேவைகள் வாரத்தில் ஐந்து ஆக குறைக்கப்படும்.
.
ஜூன் மாதம் முதல் நாளுக்கு இரண்டு சேவைகளை கொண்டிருந்த Seattle, Boston ஆகிய நகரங்களுக்கான சேவைகள் நாளுக்கு ஒரு சேவையாக குறைக்கப்படும்.
.
ஜூலை மாதம் முதல் நாளுக்கு இரண்டு சேவைகளை கொண்டிருந்த Los Angeles நகருக்கான சேவைகள் நாளுக்கு ஒரு சேவையாக குறைக்கப்படும்.
.

மத்திய கிழக்கின் மற்றைய இரு பிரபல சேவைகளான Ethihad விமான சேவையும், Qatar விமான சேவையும் தமது சேவைகள் தற்போதைக்கு குறைக்கப்பட என்று கூறியுள்ளன.
.