அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Syria

நேற்று அமெரிக்காவின் F/A-18 Hornet வகை யுத்த விமானம் சிரியாவின் SU-22 வகை யுத்த விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதை இன்று திங்கள் கடுமையாக கண்டித்த ரஷ்யா, சிரியா மேல் பறக்கும் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் தமது
இலக்கு ஆகலாம் என்றும் கூறியுள்ளது.
.
அத்துடன் சிரியாவின் மேலே பறக்கும் அமெரிக்காவின் யுத்த விமானங்களும், ரஷ்யாவின் யுத்த விமானங்களும் ஒன்றுடன் ஒன்று தவறுதலாக மோதுவதை தவிர்க்கும் பொருட்டு இருதரப்பும் இடையே கடைப்பிடித்து வந்த முன்னறிவிப்பு முறைமையையும் தாம் இரத்து செய்வதாக ரஷ்யா கூறியுள்ளது.
.
டிரம்ப் அண்மையில் சிரியாவின் விமான தளம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்திய போதும் ரஷ்யா இவ்வாறு தொடர்புகளை துடிக்கப்போவதாக கூறி இருந்தது. ஆனால் அப்போது அவ்வாறு செய்திருக்கவில்லை.
.

Euphrates ஆற்றுக்கு மேற்கே பறக்கும் விமானங்கள், வேவு விமானங்கள் எல்லாம் தமது தாக்குதல் இலக்கு ஆகாலம் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
.