அமெரிக்காவை தாக்க சீன படைகளுக்கு பயிற்சி

US_China

அமெரிக்காவை தாக்க சீன படைகளின் குண்டு வீச்சு விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலகமான பென்ரகன் (Pentagon) கூறியுள்ளது.
.
சீனாவின் படை நடவடிக்கைகளை அறிந்து, அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்காவின் காங்கிரஸ் கூறியதன் காரணமாக பென்ரகன் நேற்று வியாழன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
.
கடந்த 3 வருடங்களாக சீனாவின் PLA (People’s Liberation Army) கடல்கள் மேலாக சென்றும் தாக்கும் பயிற்சியில் தரம் அடைந்து வருவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
.
உதாரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சீனாவின் ஆறு H-6K குடுவீச்சு விமானங்கள் ஜப்பானின் Okinawa வுக்கும், Miyako வுக்கும் இடைப்பட்ட Miyako நீரினை ஊடாக தென்கிழக்கு திசையில் பறந்து, பின் வடக்கு திசையில் பறந்து Okinawa தீவின் கிழக்கு பகுதிக்கு சென்றுள்ளன. Okinawa தீவில் சுமார் 47,000 அமெரிக்க படையினர் நிலைகொண்டுள்ளனர்.
.
சீனா தற்போது நிலம், நீர், வானம் ஆகிய மூன்றில் இருந்தும் அமெரிக்காவை அணுவாயுதங்கள் மூலம் தாக்கும் வல்லமை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
.
தற்போது வருடாந்தம் சுமார் $190 பில்லியனை பாதுகாப்புக்கு செலவழிக்கும் சீனா, அடுத்துவரும் 10 வருடங்களில் சுமார் $240 பில்லியனை செலவழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது $700 பில்லியனை வருடம் ஒன்றில் பாதுகாப்புக்கு செலவழிக்கிறது.
.
அவசியம் எனின் தாய்வானை இராணுவ பலத்துடன் சீனாவுடன் இணைக்கவும் திட்டங்களை சீன இராணுவம் தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
.