அமெரிக்கா, கனடா கடும் குளிரில்

Vortex

அமெரிக்காவின் பகுதிகளும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி உள்ளன. Polar vortex என்று அழைக்கப்படும் வடதுருவ குளிர் வழமைக்கும் அதிகமாக கீழே தள்ளப்பட்டத்தால் குறிப்பாக அமெரிக்காவின் Illinois, Wisconsin, North Dakota, Michigan ஆகிய மாநிலங்களும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி உள்ளன. இவ்விடங்கள் வழமைக்கு மாறாக அதிக snow வையும் பெற்றுள்ளன.
.
ஏற்கனவே பல நாட்களாக கடும் குளிருள் மூழ்கி உள்ள சிக்காகோ நகரம் மேலும் சில நாட்களுக்கு கடும் குளிருள் தொடர்ந்தும் மூழ்கி இருக்கும். இங்கு வெப்பநிலை -35 C பாகைக்கு குறைந்து உள்ளது. இந்த வெப்பநிலை அலாஸ்காவின் (Alaska) வெப்பநிலையிலும் குறைவானது. காற்றின் தாக்கத்தையும் கணக்கிடும்போது (windchill factor) வெப்பநிலை -40 C வரை உணரப்படும்.
.
North Dakota மாநிலத்து Grand Forks நகரில் உணரப்படும் வெப்பநிலை -54 C ஆக உள்ளது.
.
இவ்வகை வெப்பநிலை காலத்தில் மூடப்படாத மனித விரல் போன்ற பாகங்கள் சுமார் 10 நிமிடங்களில் frostbite தாக்கத்துக்கு (தோலின் உட்பகுதி உறைதல்) உள்ளாகும். மீண்டும் வெப்பமான இடத்துக்கு நகரும்போது frostbite தாக்கத்துக்கு உள்ளன உடல் பாகங்கள் பொதுவாக மீட்சி அடையும் என்றாலும், மிக நீண்ட நேர frostbite நிரந்தரமாக தோல் பகுதியை பாதிக்கும். அப்பகுதிகள் நிரந்தமாக உணர்வற்ற பகுதிகளாக மாறிவிடும்.
.
அதேவேளை ஐம்பெரும் வாவிகளை சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவு snow வை பெற்றுள்ளன. Wisconsin மாநில பகுதிகள் சுமார் 24 அங்குல snow வை பெற்றுள்ளன. Toronto போன்ற கனேடிய நகர்களும் இவ்வாறே மிகையான snow வை பெற்றுள்ளன.
.
சிக்காகோ நகர் மட்டும் சுமார் 1,500 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.

.