அமெரிக்கா போகிறார் வியட்நாம் கம்யுனிஸ்ட் தலைவர்

Trong

வியட்நாமின் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் Nguyen Phu Trong (General Secretary of Communist Party of Vietnam) அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக Saigon Times Daily இன்று தெரிவித்துள்ளது. Nguyen Phu Trong க்கான அழைப்பை அமெரிக்க வெளியுறவு செயலாளர் John Kerry கடந்த சனிக்கிழமை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
.
வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சி போராளிகளை எதிர்த்து போராட முடியாத அமெரிக்கா 40 வருடங்களுக்கு முன்னர் வியட்நாமில் இருந்து பின்வாங்கி இருந்தது. இப்போரில் 58,303 அமெரிக்க படையினர் பலியாகி இருந்திருந்தனர். அத்துடன் 303,000 இக்கும் அதிகமான படையினர் காயமடைந்து இருந்தனர். அமெரிக்காவுக்கு இந்த யுத்தம் ஒரு கசப்பான நிகழ்வாகவே இருந்து வந்திருந்தது.
.

ஆனால் காலப்போக்கில் உலக அரசியல் மாறிவிட்டது. நண்பர்கள் எதிரிகள் ஆகினர், எதிரிகள் நண்பர்கள் ஆகினர். 1995 ஆம் ஆண்டில், 20 வருடங்களுக்கு முன், வியட்நாமும் அமெரிக்காவும் உறவுகளை புதுப்பித்தன. வளர்ந்து வரும் சீனாவை முகம் கொள்ள அமெரிக்காவுக்கு அப்பிராந்திய நாடுகளின் உதவிகள் தேவைப்பட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாமின் துறைமுகங்களும் விமான தளங்களும் அவசியமாகின.