அமெரிக்கா 35 ரஷ்யர்களை வெளியேற்றியது

USRussia

ரஷ்யா கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஹெலரி கிளின்டனினுக்கு எதிராக internet மூலம் தாக்குதல் செய்துள்ளது (internet hacking) என்று கூறி ஒபாமா அரசு இன்று ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒரு அங்கமாக அமெரிக்காவின் உள்ள ரஷ்ய தூதுவர் நிலையத்துடன் இணைந்து கடமைபுரிந்த35 ரஷ்யர்களை 72 மணித்தியாலத்தில் வெளியேறுமாறு ஒபாமா அரசு கூறியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
.
ஒபாமா அரசின் கூற்றுப்படி ரஷ்ய இராணுவத்தின் Main Intelligence Directorate (GRU) அமைப்பும் ரஷ்யாவின் Federal Security Services (FSB) அமைப்பும் இணைந்து ஹெலரிக்கு எதிராக தாக்குதலை செய்துள்ளன. ஹெலரி கிளின்டனின் ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு ரஷ்யாவே காரணம் என்கிறார் ஒபாமா. ஆனால் ரஷ்யா அதை மறுக்கிறது. அடுத்த ஜனாதிபதி டிரம்பும் ரஷ்யாவின் கருத்துடன் உடன்பட்டுள்ளார்.
.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியான எந்தவொரு நடவடிக்கையையும் தாம் தற்போதைக்கு எடுக்கப்போவது இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அடுத்தமாதம் 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவை ஆளப்போகும் டிரம்ப் அரசு ஒபாமாவின் முடிவுகளை இரத்து செய்யக்கூடும் என்று ரஷ்யா கருதி இருக்கலாம். ரஷ்யாவின் இந்த அமைதியான போக்கும் ஒபாமா அரசுக்கு வியப்பை கொடுத்துள்ளது.
.

ரஷ்யர்களை வெளியேற்றியது மட்டுமன்றி, அமெரிக்காவில் ரஷ்யா பயன்படுத்திய 2 கட்டங்கள் மூடப்பட்டும், GRU, FSB உட்பட 5 அமைப்புகள் தடை செய்யப்படும், 5 முக்கிய ரஷ்ய பிரமுகர்கள் தடை செய்யப்படும் உள்ளனர்.
.