அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றியது சீனா

SouthChinaSea

தென்சீன கடலில் தரவுகளை எடுத்துக்கொண்டு இருந்த அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை சீனா கைப்பற்றி உள்ளது என்று அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இன்று வெள்ளி தெரிவித்து உள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த ஆளில்லா நீர்மூழ்கி சுமார் 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்டதாகும். தானாக இயங்கும் இந்த கருவி கடலுக்கு அடியில் பல தரவுகளை எடுத்துக்கொள்ளக்கூடியது.
.
இந்த தகவலை தெரிவித்த பென்ரகன் பேச்சாளர் கடல்படை Capt. Jeff Davis, அமெரிக்கா சீனாவிடம் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமது நீர்மூழ்கி கருவியை தம்மிடம் தரவேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
.
அமெரிக்காவின் கருத்துப்படி, இந்த நீர்மூழ்கி கருவி பிலிப்பீன்ஸ் நாட்டின் Subic Bayயின் வடமேற்கே சுமார் 50 nautical miles தொலைவில் இருக்கையிலேயே சீனா கைப்பற்றி உள்ளது. இப்பகுதி எங்கும் சீனாவின் கடல் என்று சீனா கூறுகையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதை மறுக்கின்றன.
.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டதன் பின் இரு பகுதிகளும் மூடிக்கொள்ள ஆரம்பித்து உள்ளன.
.