அமெரிக்க இறைச்சி நிறுவனத்தை $4.7 பில்லியன்க்கு சீன நிறுவனம் கொள்வனவு

Shuanghui International of China என்ற சீன இறைச்சி பதனிடும் நிறுவனம் Smithfield Foods என்ற அமெரிக்க இறைச்சி பதனிடும் நிறுவனத்தை 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யவுள்ளது. பொதுவாக சீன நிறுவனங்கள் சீன தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்வதுண்டு. ஆனால் அமெரிக்காவின் உள்ளேயே இந்த அளவில் முதலிட்டு சீன நிறுவனம் வணிகம் செய்வது இதுவே முதல்தடவை. அதேவேளை Smithfield தயாரிப்புகளும் சீன பாவனையாளரை சென்றடைகின்றன.

சீனாவில் பெரியதோர் இறைச்சி பதனிடும் நிறுவனமான Shuanghui ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

உலகத்திலேயே மிகப்பெரிய பன்றி இறைச்சி பதனிடும் நிறுவனமான Simithfield, 1936 ஆம் ஆண்டு Simithfield, Virginia என்ற இடத்தில் ஆரம்பிக்கபட்டது. வருடம் ஒன்றுக்கு சுமார் 27 மில்லியன் பன்றிகளை பதனிடும் இந்த நிறுவனம் சுமார் $16 பில்லியன் வருட வருமானத்தை கொண்டது. இது சுமார் 46,000 ஊழியர்களையும் கொண்டது.