அமெரிக்க உளவு நிறுவனமான NSA இக்கு உதவியது Microsoft

உலகின் மிக பெரிய software நிறுவனமான Microsoft, அமெரிக்க உளவு நிறுவனமான NSA யின் உளவு வேலைகளுக்கு பெரிதும் உதவியதாக London Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. Edward Snowden Guardian பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்களின்படி Microsoft தனது சொந்த software encryption களையெல்லாம் கடந்து சென்று Skype, chat, outlook email போன்ற தனிநபர் சம்பாசனைகளை ஒட்டுக்கேட்க உதவியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

Microsoft இன் SkyDrive என்ற internet storage உம் இந்த உளவு பார்த்தலுக்குள் அடங்கும். SkyDrive தற்போது சுமார் 250 மில்லியன் பாவனையார்களை கொண்டுள்ளது.

Prism என்ற தலைப்புள் உளவு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் FBI, NSA, CIA போன்ற நிறுவங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுக்களை Microsoft மறுக்கிறது.

அனால் NSA இனது உள்வீட்டு memoகள் “Microsoft working with the FBI, developed a surveillance capability to deal”, “These solutions were successfully tested and went live 12 Dec 2012” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. இன்னுமோர் NSA newsletter “For Prism collection against Hotmail, Live, and outlook.com எமைல்ஸ் வில் பெ unaffected because Prism collects this data prior to encryption” என்கிறது.