அமெரிக்க ஊழலாலேயே கரோனா தடுப்பு தோல்வியுற்றது

அமெரிக்க ஊழலாலேயே கரோனா தடுப்பு தோல்வியுற்றது

அமெரிக்க மக்களை கரோனாவில் இருந்து தகுந்த முறையில் அமெரிக்கா பாதுகாக்க தவறியதற்கான காரணங்களுள் ஊழலே முதற்காரணம் என்கிறது The New York Times செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று.

குறிப்பாக அரசியல் செல்வாக்கு கொண்ட Emergent என்ற தனியார் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்துகளை மட்டுமே அமெரிக்க அரசின் Centers for Disease Control and Prevention என்ற திணைக்களத்துக்கு மிகையாக விற்பனை செய்து வந்துள்ளது.

Centers for Disease Control and Prevention முற்பாதுகாப்பது நோக்கிலேயே தனது தடுப்பு மருந்துகளை  பதுக்கல் செய்தல் புத்திசாலித்தனம். ஆனால் இந்த திணைக்களத்துடன் பின்கதவு உறவுகொண்டு Emergent தனது anthrax தடுப்பு மருந்தை அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்க வழி செய்துள்ளது. Emergent நிறுவதின் விற்பனையை அதிகரிப்பதே உள்நோக்கம்.

Centers for Disease Control and Prevention திணைக்களத்துக்கு வழங்கப்படும் பணம் பல்வேறு தடுப்பு மருந்துகள், வைத்தியர் மற்றும் தாதியர் அணியும் பாதுகாப்பது உடைகள், கையுறைகள், ventilators ஆகிய பல பொருட்களையும் கையிருப்பில் வைத்திருக்க பயன்படுத்தப்படல் அவசியம். ஆனால் அந்த நோக்கில் அமெரிக்க திணைக்களம் இயங்கி இருக்கவில்லை.

உதாரணமாக 2015ம் ஆண்டு அமெரிக்க அரசு பல்லாயிரம் N95 முக கவசங்களை கொள்வனவு செய்ய முனைந்து இருந்தாலும், Emergent அரச அதிகாரிகளை அழுத்தி, அந்த பணத்துக்கு பதிலாக சுமார் $1 பில்லியன் பெறுமதிக்கு மேலும் anthrax மருந்துகளை விற்பனை செய்துள்ளது. 2019ம் ஆண்டு கரோனா வந்தபோது N95 கவசத்துக்கு அமெரிக்கா திண்டாடி இருந்தது.

Emergent விற்பனை செய்யும் anthrax தடுப்பு மருந்தும் சுமார் 30 ஆண்டு பழைய நுட்பத்தை கொண்டது. அதிலும் தரமான புதிய நுட்பங்கள் கொண்ட anthrax மருந்துகள் தற்போது உண்டு. ஆனால் Emergent வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய anthrax தடுப்பு மருந்துகளையும் தடுத்து வருகிறது.

2009ம் ஆண்டு H1N1 தாக்கியபோதும் அமெரிக்கா அதற்கான தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்திருக்கவில்லை. அதுவும் அமெரிக்காவுக்கு ஒரு படிப்பினையாக அமைந்து இருக்கவில்லை.

2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்க ஒதுக்கீடு செய்த அரசின் தடுப்புமருந்து பதுக்கல் முதலீடுகளில் 40% பெறுமதி Emergent விற்பனை செய்யும் anthrax தடுப்பு மருந்துக்கே அவசியம் இன்றி மீண்டும் செலவானது.