அமெரிக்க காங்கிரஸ்சில் இந்திய பிரதமர் மோடி

Modi

இன்று புதன் இந்தியாவின் பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸ்சில் சமூகம் கொண்டு உரையாற்றி உள்ளார். தனது உரையில் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரத்திலும், பாதுகாப்பில் இணைந்து செயற்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
.
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஆகுமுன் மோடிக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தடை செய்திருந்தது. இவர் குயாரத்தின் முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில், 2002 ஆம் ஆண்டில், அங்கு இடம்பெற்ற இஸ்லாமியர் மீதான வன்முறைகளுக்கு சுமார் 1000 பேர் பலியாகி இருந்தனர். மோடி அதை தடுக்காது ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வளர்ந்துவரும் சீனாவுக்கு முகம் கொடுக்க அமெரிக்காவுக்கு இந்தியா அவசியப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவின் முதலீடுகள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.
.
கடந்த இரண்டு வருடங்களில் மோடி நான்கு தடவைகள் அமெரிக்கா வந்துள்ளார். மோடி அமெரிக்க காங்கிரஸ் சென்ற ஐந்தாவது இந்திய பிரதமர் ஆவார்.
.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் இதியாவுக்கும் இடையிலான வர்த்தகம் $60 பில்லியன் ஆக இருந்தது. ஆனால் அது 2015 ஆம் ஆண்டில் $107 பில்லியன் ஆக உயர்ந்திருந்தது.
.