அமெரிக்க காட்டுத்தீக்கு பலர் பலி

அமெரிக்க காட்டுத்தீக்கு பலர் பலி

அமெரிக்காவின் California, Oregon ஆகிய இரண்டு மேற்கு மாநிலங்களும் காட்டு தீயுள் மூழ்கி உள்ளன. அதில் குறைந்தது 42 பெரிய அளவிலான தீ. San Francisco, Portland, Seattle, Vancouver (கனடா) ஆகிய நகரங்கள் காட்டுத்தீ புகையின் தாக்கத்தில் உள்ளன. சிறிய அளவில் மேலும் 10 மாநிலங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது.

California மாநிலத்தில் கடந்த சில கிழமைகளில் குறைந்தது 20 பேர் காட்டு தீக்கு பலியாகி உள்ளனர். இந்த மாநிலத்தில் சுமார் 3.1 மில்லியன் ஏக்கர் தீக்கு இதுவரை இரையாகியுள்ளது.

Oregon மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 13 பையனும், அவனின் 71 வயது பாட்டியும் கார் ஒன்றுள் தீக்கு இரையாகி உள்ளனர். பலியான பையனின் நாய் அவனின் மடியில் இருந்துள்ளது.

Oregon மாநிலத்தில் உள்ள Phoenix, Talent ஆகிய இரண்டு சிறு நகரங்களும் ஏறக்குறைய முற்றாக எரிந்து உள்ளது. இவை இரண்டினதும் மொத்த சனத்தொகை 11,000.

Oregon மாநிலத்தில் மட்டும் சுமார் 500,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படுகிறார்கள். இத்தொகை அந்த மாநில சனத்தொகையின் 10% ஆகும். இங்கு சுமார் 850,000 ஏக்கர் தீக்கு இரையாகி உள்ளது.