அமெரிக்க குண்டுக்கு Mosul நகரில் 137 பேர் பலி

Syria

இந்த மாதம் 17ம் திகதி அமெரிக்க யுத்த விமானம் ஒன்று ஈராக்கின் Mosul நகரில் வீசிய குண்டுக்கு 137 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்று பல நாட்கள் ஆகிவிட்டாலும், தற்போதே உண்மை விபரங்கள் வெளிவருகின்றன. வேறுசிலர் இந்த சம்பவத்தில் மரணித்தோர் தொகை 230 வரை இருக்கலாம் என்கின்றனர்.
.
நேற்று திங்கள் அமெரிக்காவின் இராணுவ பேச்சாளர் கேணல் John Thomas தனது கூற்றில் அமெரிக்கா இந்த தாக்குதலை முறைப்படி விசாரணை செய்கிறது என்றுள்ளார்.
.
Mosul பகுதியில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் “பல குடும்பங்கள் வாழும் ஒரு வீட்டின் அருகே ஒரு சில ISIS நபர் நின்றாலும் அமெரிக்கா பெரும் குண்டுகளை அவ்விடத்தில் வீசுகிறது என்று கூறியுள்ளார்.
.
ISIS என்ற அமைப்பின் பிரதான நகராக Mosul உள்ளது. ஈராக்கின் பல இடங்களிலில் இருந்தும் விரட்டப்பட்ட ISIS உறுப்பினர் இறுதியில் Mosul நகரில் குவிந்துள்ளனர். அமெரிக்கா, ஈரான், உட்பட பலநாடுகளில் உதவிகளுடன் அந்நகரை மீட்க முனைகிறது ஈராக் அரசு.
.
ஆப்கானிஸ்தானின் Kunduz மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு அமெரிக்க யுத்த விமானங்கள் வீசிய குண்டுகளுக்கு 91 முதல் 172 வரையானோர் பலியாகி இருந்தனர்.

.