அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில், இரண்டு தடவைகள்

Trump

அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்து செனட்டர் John MaCain கடந்த சனிக்கிழமை, தனது 82 ஆவது வயதில், காலமாகியிருந்தார். அமெரிக்காவின் கடற்படையில் பணியாற்றிய இவரின் யுத்த விமானம் 1967 ஆண்டு எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எதிரிகளிடம் அகப்பட்ட இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
.
அமெரிக்காவில் பல அரசியல் பதவிகளை வகித்த இவர் 1987 ஆம் ஆண்டு முதல் அரிசோனா மாநிலத்து செனட்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
.
இவர் ரம்புக்கு ஆதரவு வழங்காமையால் இவரை ஒரு யுத்த வீரர் இல்லை (not a war hero) என்று கூறியிருந்தார் ரம்ப். MaCain மீது வெறுப்பு கொண்ட ரம்ப் பல தடவைகள் அவதூறுகளையும் வீசியிருந்தார்.
.
சனிக்கிழமை MaCain மரணித்தபின் அமெரிக்காவின் வழமைக்கு ஏற்ப வெள்ளைமாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. வெள்ளைமாளிகை மட்டுமன்றி அனைத்து அமெரிக்க கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அவை தொடர்ந்தும் அரைக்கம்பத்திலேயே உள்ளன.
.
ஆனால் வெள்ளைமாளிகை கொடி மறுநாள் ஞாயிரு முழுக்கம்பத்துக்கு மீண்டும் உயர்ந்து விட்டது. இதனால் விசனம் கொண்ட பலரும் ரம்பை சடா ஆரம்பித்தனர். அமெரிக்காவின் முன்னாள் படை வீரர்கள் அமைப்புகளும் கூடவே ரம்பை சாட, வெள்ளைமாளிகை மீண்டும் இன்று திங்கள் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.
.