அமெரிக்க டாலருக்கு 200 இலங்கை ரூபா

அமெரிக்க டாலருக்கு 200 இலங்கை ரூபா

இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 200 இலங்கை ரூபா என்ற நாணய மாற்று விகிதத்தை அடைந்துள்ளது இலங்கை நாணயம். இந்நிலை சில மணி நேரம் நீடித்து பின் டாலருக்கு 198 ரூபாய் என்ற மாற்று விகிதத்தை அடைந்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கும், இலங்கை நாணய பெறுமதி இழப்புக்கும் யுத்தத்தை காரணம் கூறி இருந்தாலும், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த காலத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 100 இலங்கை ரூபாய் என்ற நாணய மாற்று விகிதமே நிலவியது. யுத்தம் முடிந்த பின்னும் இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சி அடைய பிரதான காரணிகள் அங்கு ஆட்சிக்கு வந்த அனைத்து கட்சிகளுமே.

இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் என்றே ஏதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கொண்டுள்ள மிதமான வெளிநாட்டு கடன்கள், பாரிய இலஞ்சம், திருட்டு நோக்கம் கொண்ட பொருளாதார முயற்சிகள் எல்லாமே நாணய பெறுமதி வீழ்ச்சி அடைய காரணங்கள். அதேநேரம் கரோனாவும் பொருளாதாரத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.