அமெரிக்க படை 80,000 ஆல் குறைப்பு

அமெரிக்காவின் படை எண்ணிக்கை 80,000 ஆல் குறைக்கப்படவுள்ளது என அமெரிக்க இராணுவ chief of staff ஜெனரல் Ray Odierno கூறியுள்ளார். இந்த படைக்குறைப்பின் பின்னர் அமெரிக்காவில் 33 brigade களில் மொத்தம் 490,000 படையினர் இருப்பர். தற்போது அமெரிக்காவில் 45 brigade உள்ளது. இந்த குறைப்பு அடுத்த 5 வருடங்களில் முற்றுப்பெறும். ஒபாமா அரசு 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய Budget Control காரணமாக இராணுவம் தனது வரவுசெலவு திட்டத்தை US$ 487 பில்லியன்களால் அடுத்த 10 வருடத்துள் குறைத்தல் அவசியம்.

இந்த குறைப்புக்கு அமெரிக்காவின் Colorado. Georgia, Kansas, Kentucky, New York, North Carolina, Texas, Washington போன்ற மாநிலங்களில் உள்ள brigade களே குறிவைக்கப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்காவுக்கு வெளியே ஜெர்மனியிலும் இரண்டு brigade கள் மூடப்பட உள்ளன. ஆனால் ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தொகையில் மாற்றம் எதுவும் இல்லை.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திருப்பி அழைப்பதுவும் இந்த குறைப்புக்கு உதவியாக உள்ளது. புதிய இராணுவ தொகை 2001 இல் நடைபெற்ற 9/11 தாக்குதலுக்கு முன் இருந்த தொகைக்கு ஒப்பானது.

ஒரு brigade இல் சுமார் 3,500 முதல் 5,000 வரையான வீரர்கள் இருப்பர்.