அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கும் சீனர்

ChineseEB5

முன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு வீடுகளும் இவ்வகையில் செல்வந்த சீனர்களால் கொள்வனவு செய்யப்படுகிறது.
.
தற்போது சராசரியாக சீன நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடு ஒன்று $831,800 பெறுமானம் கொண்டதாகும் என இக்கட்டுரை கூறுகிறது. அதேவேளை இந்திய நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடுகளின் சராசரி விலை $460,200 ஆகும்.
.
2014 ஆண்டு March முதல் 2015 ஆண்டு March வரையான ஒரு வருட காலத்துள் சீன நாட்டவர் $28.6 பில்லியனுக்கு ($28,600,000,000) அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர். உலக அளவில் இவ்வகை கொள்வனவுகளுக்காக கடந்த வருடம் June முதல் இந்த வருடம் June வரையான ஒரு வருட காலத்துள் $590 பில்லியன் பணம் சீனாவை விட்டு வெளியேறி உள்ளதாம். அத்துடன் 69% சீன நாட்டவர் வீடுகளை 100% பணம் கொடுத்தே கொள்வனவு செய்கிறார்களாம். ஆனால் சாதாரண அமெரிக்கர் வீடு கொள்வனவு செய்யும் போது சுமார் 10% முதல் 30% வரையான பணத்தை செலுத்தி மிகுதியை கட்டுமானமாக மாதாந்தம் செலுத்துவர்.
.
இவ்வாறு அமரிக்க வீடுகளை சீன நாட்டவர் கொள்வனவு செய்வதை அறிந்த பல வீடு விற்பனையாளர் அமெரிக்க வீடுகளை சீன மொழி Web களின் மூலம் சீனாவிலேயே விளம்பரம் செய்கிறார்களாம். அதில் ஒன்று www.leju.com ஆகும்.
.
அன்னியர் வீடுகளை கொள்வனவு செய்வதால் எதிர் காலத்தில் உருவாகக்கூடிய இடர்பாடுகளை எண்ணி சில நாடுகள் இவ்வகை கொள்வனவுகளை தடுக்க அல்லது குறைக்க சட்டங்கள் வரைவதுண்டு. Hong Kong, சிங்கப்பூர் ஆகியன வெளிநாட்டவர் வீடுகளை கொள்வனவு செய்யும்போது மேலதிகமாக 15% வரியை அறவிடுகின்றன. ஆனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இவ்வகை தடை இல்லை.
.
அத்துடன் அமெரிக்காவின் பல்கலைக்களகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 31% அளவானோர் சீன பிரசைகள் ஆவர். இவர்களின் பயன்பாட்டுக்கும் பெற்றோர் வீடுகளை கொள்வனவு
.
அமெரிக்காவின் EB-5 என்ற விசாக்களின் 86% பங்கையும் சீன நாட்டவரே பெற்றுள்ளனர். EB-5 என்ற விசா $500,000 முதல் $1,000,000 பணத்தை அமெரிக்காவில் முதலிட்டு, அதன் மூலம் குறைந்தது 5 பெயர்களுக்கு வேலைவாய்ப்பை வலுங்குவோருக்கு கொடுப்பதாகும். இவ்விசா உள்ளோர் 2 வருடத்தில் அமெரிக்காவின் green cardஐ பெறலாம்.
.

படம்: New York Times
.