அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க காங்கிரசில் (US Capitol) ரம்பின் ஆதரவாளர் இன்று மேற்கொண்ட வன்முறை தாக்குதலின்பொழுது பலியானோர் தொகை 4 ஆக உயர்ந்துள்ளது. சனாதிபதி நிலைகொண்டுள்ள வெள்ளை மாளிகைக்கு அடுத்து அமெரிக்காவின் பிரதான கட்டிடமான US Capitol அமெரிக்க காங்கிரசின் அமர்விடம்.

மரணித்தவருள் ஒருவர் பெண். அவர் துப்பாக்கிக்கு சூட்டுக்கு இலக்காகி மரணமானார். அத்துடன் இன்னோர் பெண்ணும், இரு ஆண்களும் மரணமாகி இருந்தாலும் அவர்களின் மரண காரணங்கள் அறிவிக்கப்படவில்லை.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய பெண் தனது மனைவி Ashli Babbitt என்று San Diego நபரான Aaron Babbitt  கூறியுள்ளார். தன் மனைவி ஒரு ரம்ப் ஆதரவாளர் என்றும் கணவர் கூறியுள்ளார். சம்பவத்தின் பின் தனது text செய்திகளுக்கு மனைவி பதில் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இப்பெண் அமெரிக்க விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பைடெனின் வெற்றியை சம்பிரதாயபூர்வமாக காங்கிரசில் ஏற்கும் நிகழ்வு இடம்பெற்ற தருணத்தில் ரம்ப் தனது ஆதரவாளர்களை அழைத்து பெரும் கூட்டம் ஒன்றை கூடியிருந்தனர். கூட்டத்தின் பின் தனது ஆதரவாளர்களை Capitol நோக்கி சென்று பைடென் சனாதிபதியாவதை நிறுத்த கூறியிருந்தார். தானும் உடன் வருவதாக கூறி இருந்தாலும் தொண்டர்களை ஏவிய அவர் Capitol  செல்லவில்லை.

வன்முறை கறைகளில் இருந்து தம்மை விடுவிக்கும் நோக்கில் பல ரம்ப் கட்சி உறுப்பினர்கள் தற்போது ரம்பை தாக்கி, பைடெனின் வெற்றியை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

1814ம் ஆண்டு இடம்பெற்ற War of 1812 காலத்தில் பிரித்தானியா தாக்கியதன் பின் இன்றே Capitol தாக்குதலுக்கு உள்ளாகியது.