அம்பானி நிறுவனம் திரட்டிய $4 பில்லியன் வெளிநாட்டு பணம்

அம்பானி நிறுவனம் திரட்டிய $4 பில்லியன் வெளிநாட்டு பணம்

இந்திய வர்த்தகர் அம்பானியின் தலைமையில் இயங்கும் Reliance Industries என்ற நிறுவனம் bond மூலம் $4 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டி உள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று bond மூலம் பெற்ற மிகக்கூடிய தொகை இதுவே.

இந்த bond சிங்கப்பூர் stock exchange மூலமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த bond களின் 53% த்தை ஆசியரும், 33% த்தை அமெரிக்கரும், 14% த்தை ஐரோப்பியரும் கொள்வனவு செய்து உள்ளனர்.

மேற்படி bond கொள்வனவை செய்த நிறுவனங்களின் பெயர்கள் அறிவிக்கப்படாவிடினும், Fidelity, PacificInvestment Management Company, Metlife, Eastspring, NeubergerBerman, Blackrock, LombardOdier ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன், 2014ம் ஆண்டில், இந்தியாவின் Oil and Natural Gas Corporation நிறுவனம் $2.2 பில்லியன் வெளிநாட்டு bond மூலமான முதலீட்டை பெற்று இருந்தது.

இந்நிலையில் இலங்கை அரசு மேற்படி தொகையிலும் அளவிலான அமெரிக்க டாலரையே திரட்ட முடியாது உள்ளது.