அயர்லாந்து RUC மீது இலங்கை பெண் வழக்கு

RUC

அயர்லாந்தின் RUC (Royal Ulster Constabulary) என்ற போலீஸ் சேவை மீது இலங்கை தமிழ் விதவை பெண் ஒருவர் நட்டஈடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக Police Ombudsman for Northern Ireland கூறியுள்ளது. 1986 ஆம் ஆண்டில் பெயர் குறிப்பிடப்படாத இந்த பெண்ணின் குடும்ப அங்கத்தவர் 10 பேரை இலங்கையின் விசேட அதிரடிப்படை (Special Task Force) படுகொலை செய்ததாகவும், STFக்கு பயிற்சி வழங்கிய RUC அக்கொலையின் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
.
அண்மையில் International Human Rights Association வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கை பொலிஸாருக்கு பிரித்தானியா பயிற்சி வழங்கியது குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவின் உதவிகள் இலங்கையின் STF படையை திட்டமிடவும், வளர்க்கவும் உடந்தையாக இருந்தன என்றுள்ளது. அந்த அறிக்கையும் இந்த வழக்குக்கு ஆதாரமாக காட்டப்பட்டு உள்ளது.
.
இலங்கை போலீஸ் படையின் உயர் அதிகாரிகள் 1983 ஆம் ஆண்டு Belfast நகருக்கு பயணம் செய்தமையும் இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது.
.

இப்பெண் சார்பில் Belfast நகரை தளமாக கொண்ட KRW Law நிறுவன சட்டத்தரணி Darragh Mackin செயல்படுகிறார்.
.