அல்கைடா தலைவரை அமெரிக்கா தாக்கி கொலை

அல்கைடா தலைவரை அமெரிக்கா தாக்கி கொலை

Ayman al-Zawahiri என்ற அல்கைடா இயக்கத்தின் தற்போதைய தலைவரை அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொலை செய்துள்ளது. ஒசாமா பின் லாடன் மறைவுக்கு பின் இவரே அந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ளார்.

ஆப்கானித்தானில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சனி/ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஆனால் மேலதிக விபரங்களை பைடென் பின்னர் கூறுவார்.

தற்போது 71 வயதான இவர் மீதான தாக்குதலை அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி திங்கள் மாலை 7:30 மணிக்கு அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

al-Zawahiri கைதுக்கு உதவுவோருக்கு அமெரிக்கா $25 மில்லியன் சன்மானம் வழங்க முன்வந்திருந்தது. இவரின் மனைவியும் பிள்ளைகளும் ஆப்கானித்தானின் Tora Bora மலை பகுதியில் அமெரிக்க தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வைத்தியராக இவர் பின்லாடனின் வைத்தியராகவும் பணியாற்றியவர். சோவியத்தை எதிர்த்து போராடிய முயாகுதீன் போராளிகளுக்கும் இவர் வைத்தியம் செய்துள்ளார்.