அழுத்தங்கள், முறுகல்கள் மத்தியில் G20 அமர்வு

G20Argentina2018

அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களும், முறுகல்களும் உள்ள நிலையில் G20 அமர்வு ஆர்ஜென்டீனாவில் இடம்பெறவுள்ளது. நாளை வெள்ளி 30 ஆம் திகதியும், மறுநாள் டிசம்பர் 1 ஆம் திகதியும் இந்த அமர்வு இடம்பெறும்.
.
அமெரிக்கா-சீனா பொருளாதார முறுகல், ரஷ்யா-யுக்கிரைன் முறுகல், சவுதி-ஜமால் கசோகி விடயம், ஈரான் பொருளாதார தடை, வடகொரியா போன்ற பல விடயங்கள் இம்முறை G20 அமர்வுள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
.
ரம்ப் அரசு சீனாவிலிருந்தான பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை (tariff) விதித்து சீனாவை பணிய வைக்க முனைந்தது. ஆனால் சீனா தானும் புதிய பதில் வரிகளை விதித்து பணிய மறுத்தது. அதனால் ரம்ப் சிலவேளைகளில் சீனாவுடன் ஒரு இணக்கத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
இந்த அமர்வில் அமெரிக்க, சீனா ஜனாதிபதிகள் நேரடியாக பேசவுள்ளனர். அவர்கள் பேச்சு இணக்கம் ஒன்றை ஏற்படுத்த தவறின், இவர்களுக்கு இடையிலான முறுகல் மேலும் வலு அடையும்.
.
திட்டமிடப்பட்டு இருந்த ரம்ப்-புட்டின் பேச்சு, யுகிரைன்-ரஷ்யா முரண்பாடு காரணமாக, நிறுத்தப்படுள்ளது.
.
விமான கோளாறு காரணமாக ஜெர்மனியின் அங்கேலா மெர்கல் பயணம் தடைப்பட்டுள்ளது. அதனால் அவர் அமர்வில் பங்கு கொள்ளமாட்டார்.
.