ஆப்கான் இல்லாது ஆப்கான் மாநாடு

Afhanistan

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஆராய ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மாநாடு ஒன்றை இன்று செவ்வாய் நடாத்தி உள்ளன. மாஸ்கோவில் இடம்பெற்ற ஆபிகானிஸ்தான் தொடர்பான இந்த மாநாட்டுக்கு ஆப்கானிஸ்தான் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் விசனம் கொண்டுள்ளது தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு. கூடவே அமெரிக்காவும் விசனம் கொண்டுள்ளது.
.
தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பானது. அமெரிக்கா மூலம் இந்தியாவே ஆப்கானிஸ்தானில் அபிவிருத்தி வேலைகளை செய்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆளுமை செய்வதற்கு போட்டியாகவே ரஷ்யாவும், சீனாவும், பாகிஸ்தானும் தமது ஆளுமையை முன்வைக்க முனைகின்றன.
.
பல ஆப்கான் பிரசைகள் மீதுள்ள, ஐ.நா. மூலமான, தடைகளை விலக்க இன்றைய மாஸ்கோ மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டும் உள்ளது. அத்துடன் தேவைப்படின் எதிர் காலத்தில் ஆப்கான் அரசுக்கும் அழைப்பு விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.

அமெரிக்கா கடந்த 15 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வருகிறது. தற்போதும் அங்கு சுமார் 10,000 அமெரிக்க படையினர் உள்ளார். ஆனால் ரஷ்ய, சீன, பாகிஸ்தான் கூட்டு ஆப்கான் விடயத்தில் அமெரிக்காவை கருத்தில் கொள்ளவில்லை. பதிலாக ஆப்கானிஸ்தானில் ISIS பரவி வருவதாகவும், அங்கு பாதுகாப்பு இல்லாமல் போவதாகவும் இந்நாடுகள் கூறியுள்ளன. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் ஆப்கானித்தானில் பலியாகி உள்ளார்.
.