ஆர்பாட்டங்களால் பாதிப்புறும் ஹாங்காங் பொருளாதாரம்

HongKong

ஹாங்காங் நகரில் சுமார் 80 நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது அந்த நகரின் பொருளாதாரத்தை பாதிக்க ஆரம்பித்துள்ளது.
.
Golding Financial Holdings என்ற முதலீட்டு நிறுவனம் ஹாங்காங் நகரில் U$1.4 பில்லியனுக்கு வர்த்தக நிலம் ஒன்றை கொள்வனவு செய்யவிருந்தது. அனால் அண்மையில் அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்த நிறுவனம் தனது திட்டத்தை கைவிட்டு உள்ளது.
.
அங்கு குடியிருப்பு வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்கான கொள்வனவு பதிவுகள் சுமார் 24% ஆல் வீழ்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
.
அந்த நகரின் நிதி செயலாளர் Paul Chan Mo ஹாங்காங் விரைவில் பொருளாதார மந்த நிலையை (recession) அடையலாம் என்று கூறியுள்ளார்.

.