ஆள ஆளில்லா ஜப்பானிய சிறுநகர்

Japan

ஆட்சியை கைப்பிடிக்க ஆளுக்காள் சண்டையிடும் இந்நாளில் ஆள ஆளில்லாமல் உள்ளது ஜப்பானிய சிறு நகரான Okawa. மொத்தம் 400 மக்களை கொண்டுள்ள இந்த சிறு நகரம் ஜப்பானின் Kochi பகுதியில் உள்ளது.
.
Okawa நகரசபைக்கு 6 உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர். 2015 ஆம் ஆண்டு நகரசபை தேர்தலில் 6 வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டு இருந்தனர். ஆனாலும் இதில் எவரும் குறைந்தது ஒரு வாக்காவது பெற்றிருக்கவில்லை. அப்படி இருந்தும் அந்த 6 பேரும் வேறு வழி இன்றி நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்.
.
இனிவரும் காலங்களில் 6 பேர் போட்டியிட முன்வருவதே கேள்விக்குறியாக அந்த நகர் நகரசபையை முற்றாக நீக்கி நேரடி மக்கள் ஆட்சியை நிறுவி உள்ளது.
.
நேரடி ஆட்சி முறையில், வரவுசெலவு வாதங்களின் போது தகுதி உடைய எந்தவொரு அந்நகர் பிரசையும் கலந்து வாக்களிக்கலாம்.
.

1951 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள Utsuki என்ற சிறு நகரும் இவ்வாறு நேரடி மக்கள் ஆட்சியை ஆரம்பித்து இருந்தது.
.