இந்தியாவின் மனித எலும்பு கொண்ட வாவி

இந்தியாவின் மனித எலும்பு கொண்ட வாவி

இந்தியாவின் வடக்கே, உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தில், உள்ள திரிசூல் (Trisul) மலையோரம் Roopkund Lake என்ற சிறு வாவி உண்டு. அது கடல் மட்டத்தில் இருந்து 5,029 மீட்டர் (16,500 அடி) உயரத்தில் உள்ள வாவி.

பொதுவாக snow நிறைந்த இந்த வாவியின் அடியில் சுமார் 600 முதல் 800 வரையான மனிதர்களின் எலும்புகள் உள்ளன. 1942ம் ஆண்டு பிரித்தானியர் ஒருவர் இங்கு மனித எலும்புகள் இருப்பதை பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த எலும்புகள் யாருடையவை, எப்போது இங்கே வந்தன, ஏன் இங்கே வந்தன என்பது இதுவரை திடமாக அறியப்படவில்லை.

முன்னொரு ஆய்வு இந்த எலும்புகள் 35 வயது முதல் 40 வயதானோரின் என்று கண்டிருந்தது. அத்துடன் இங்கு சில வயோதிப பெண்களின் எலும்புகளும் இருந்தாலும், சிறுவர்கள் அல்லது குழந்தைகளின் எலும்புகள் எதுவும் இங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இங்கு மரணித்தோர் படுகாயம் எதையும் அடைவில்லை என்றும், இவர்கள் நலமான தேகத்தையே கொண்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இவர்களுடன் போருக்கு பயன்படுத்தும் எந்தவிதமான ஆயுதங்களும் இருந்திருக்கவில்லை.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் 28 ஆய்வாளர் மேற்கொண்ட carbon-dated ஆய்வு ஒன்று இந்த எலும்புகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் மரணித்தோருக்கு உரியன என்று கூறுகிறது. இந்த ஆய்வுக்கு அங்கிருந்த 38 எலும்புகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

இவர்கள் ஒரே காலத்தில் மரணிக்கவில்லை என்றும், இவர்கள் சுமார் 1,000 ஆண்டு இடைவெளியில் மரணித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த உடல்களில் சில தெற்காசியருக்கு உரியன என்றாலும், சில எலும்புகள் Crete என்ற கிரேக்க தீவு மக்களின் DNA யை ஒத்தது என்றும் கூறப்படுகிறது. தெற்காசிய உடல்களிலும் சில வட இந்தியருக்கான ஆதாரங்களையும், சில தென் இந்தியருக்கான ஆதாரங்களையும் கொண்டன என்றும் கூறப்படுகிறது.

இதன் வாவி எந்தவொரு முற்கால வர்த்தக பாதைகளை அண்டிய பகுதியும் அல்ல. அதனால் மேற்படி எலும்புகளையிட்டு வியப்புறுகிறார் ஆய்வாளருள் ஒருவரான Eadaoin Harney என்ற Harvard University ஆய்வாளர்.