இந்தியாவிலும் பெருவெள்ளம், 125 பேர் பலி

இந்தியாவிலும் பெருவெள்ளம், 125 பேர் பலி

இந்தியாவின் மேற்கு உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற கடும் மழை தோற்றுவித்த வெள்ளத்துக்கு இதுவரை குறைந்தது 125 பேர் பலியாகி உள்ளனர். சில பள்ளமான இடங்களில் வீடுகளின் கூரைவரை வெள்ளம் உயர்ந்து உள்ளது.

வீதிகள், தண்டவாளங்கள் நீருள் அமிழ்ந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்பாய்-பெங்களூர் பெருவீதியின் பாகங்களும் வெள்ளத்துள் மூழ்கி உள்ளது. அதனால் பல்லாயிரம் பார வாகனங்களும் இடைவெளியில் முடங்கி உள்ளன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியில் பெருமழை மொழிந்து உள்ளதாக கூறப்படுகிறது. Mahabaleshwar என்ற இடத்தில் சுமார் 24 மணி நேரத்துள் 600 mm (23 அங்குலம்) மழை பெய்துள்ளது.

மும்பாய்க்கு தென்கிழக்கே 180 km தூரத்தில் உள்ள Taliye என்ற நகரில் மட்டும் மண் சரிவுக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் இருப்பிடம் அறியப்படாதும் உள்ளனர்.

Kolhapor என்ற நகரத்துக்கு அருகே செல்லும் பஞ்சாங்க ஆறும் (Panchganga River) அது இணையும் கிருஷ்ணா ஆறும் (Krishna River) வெள்ளத்தால் மேவி உள்ளன