இந்தியாவில் கனடிய பிரதமர், வேண்டாத விருந்தாளி?

JustinTrudeau

கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தற்போது இந்திய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முன்னரே இவர் இந்தியாவில் சிறிது எதிர்ப்புக்களை எதிர்பார்த்து இருந்திருந்தாலும், தற்போது கனடிய பிரதமருக்கு இந்தியாவில் கிடைக்கும் புறக்கணிப்புகள் அவரை ஒரு வேண்டா விருந்தாளியாக காண வைத்துள்ளது.
.
முதலில் இந்திய பிரதமர் மோதி, கனடிய பிரதமரை குறைவு செய்திருந்தார். கனடிய பிரதமரை தான் விமான நிலையம் சென்று வரவேற்பதற்கு பதிலாக, ஒரு junior அமைச்சரை வரவேற்க அனுப்பி இருந்தார் மோதி.
.
வேண்டா நபர் ஒருவர் பாட்டல் குற்றம், தொட்டால் குற்றம் என்பது போல் கனேடிய பிரதமரும், அவரின் குடும்பமும் புஞ்சாப்பில் உள்ள பொற்கோவில் முன்னே ‘வணக்கம்’ கூறும் நிலையில் புகைப்படங்கள் எடுத்தையும் இந்தியா நையாண்டி செய்கிறது இந்தியா. இந்த குடும்பம் பயணத்தின்போது அணியும் கண்ணைக்குத்தும் வண்ண ஆடைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.
.
உண்மையில் கனடிய பிரதமர் மீதான விரோதத்துக்கு காரணம் அவரின் சீக்கியர் மீதான நெருக்கமே. கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல முன்னணி அரச உறுப்பினர் சீக்கியர்.
.
சீக்கிய கிளர்ச்சி முற்றி இருந்த காலத்தில், இந்தியாவுக்கு வெளியே கனடாவிலேயே சீக்கிய ஆதிக்கம் அதிகம் இருந்தது. அப்போதே கனடாவில் இருந்து சென்ற Air India விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டு இருந்தது. அப்போதும் கனடிய அரசு மந்தமான, விரும்பம் இன்றிய விசாரணையையே செய்தது.
.
அந்நாளில் வன்கூவரில் ஒரு பிரபல சீக்கியர் 50,000 இந்துக்களை கொலை செய்வேன் என்று பகிரங்கமாக கூட்டம் ஒன்றில் கூறிய போதும் கனடிய போலீசார் மறுபக்கம் பார்த்திருந்தனர்.
.
கனடிய அரசியல்வாதிகள் சீக்கியர் பக்கம் நாடுவதற்கு காரணம், கனடாவில் உள்ள பெரும் தொகையான சீக்கிய வாக்குகளே காரணம்.
.
கனடிய பிரதமர் கலந்து கொள்விருந்த வர்த்தக கூட்டம் ஒன்றுக்கு Jaspal Atwal என்ற சீக்கிய வர்தகருக்கும் கனடா அழைப்பு விடுத்து இருந்ததாம். 1980களில் Jaspal Atwal இந்திய அமைச்சர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சிகள் செய்திருந்தவர். அந்த அழைப்பு பின் இரத்து செய்யப்பட்டு இருந்தது.
.

தற்போது இந்தியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் மகனுக்கு கிடைத்த வரவேற்பு கனடிய பிரதமருக்கு கிடைத்திலும் அதிகம்.
.