இந்திய அணிவகுப்பில் அக்கினி V, விக்கிரமாதித்தன்

இன்று தைமாதம் 26ஆம் திகதி இந்தியா தனது குடியரசு தினத்தை தலைநகர் டில்லியில் கொண்டாடியது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல விசேட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் முக்கிய பாகமாக இராணுவத்தின் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்கினி V என்ற ஏவுகணையும் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ள விக்கிரமாதித்தன் என்ற விமானம் தாங்கி கப்பலின் அமைப்பும் எடுத்துச்செல்லப்பட்டது.

அக்கினி V என்ற ஏவுகணை 5000 km வரை செல்லக்கூடியது. இது முற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதாவது இது ஆசியாவின் பெரும்பகுதி, ரஷ்யாவின் பாகங்கள், மற்றும் ஐரோப்பாவின் பாகங்களை அடையக்கூடியது. 50,000 kg பாரம் கொண்ட இது 1500 kg ஆயுதத்தை கொண்டுசெல்லக்கூடியது. இதன் நீளம் 17.5 மீட்டர், விட்டம் 2 மீட்டர்.

INS Vikramaditya என பெயர் இடப்பட்டுள்ள இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பல் உண்மையில் ரஷ்யாவின் Admira Gorshkov விமானம் தாங்கி கப்பல். 1987 இல் USSR இராணுவத்தில் சேவையை ஆரம்பித்த இதை 1996 இல் உடைந்துபோன ரஷ்யா சேவையில் இருந்து நீக்கியது. அதையே இந்திய 2004 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. தற்போது இக்கப்பல் இந்திய சேவையின் தேவைக்கேற்ப ரஷ்யாவினால் மாற்றி அமைக்கப்படுகிறது. இக்கப்பல் இந்த வருடம் இந்திய கடல்படையினால் சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.