இந்திய குடியரசு தினத்தில் ஒபாமா

India-US

இன்று 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்கிறார் அமெரிக்க ஜானதிபதி ஒபாமா. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் இரு தடவைகள் இந்தியா செல்வது இதுவே முதல் தடவை.
.
ஒபாமாவை வரவேற்கும் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வந்திருந்தது.
.
இந்தியாவில் அணுமின் நிலையங்களை கட்டுதலில் அமரிக்காவின் பங்களிப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் என்பன ஒபாமாவின் பயணத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை உடன்பட்டு இருந்தன. ஆனால் 2010 ஆம் ஆண்டில் இந்தியா அறிமுகப்படுத்திய சட்டம் ஒன்றின்படி அணுமின் நிலையயங்களில் விபத்துக்கள் ஏற்படின் (Bhopal விபத்து வகை விபத்து) அணுமின் கட்டுமானத்தை செய்யும் அமெரிக்க நிறுவனங்களே நிவாரண பெறுப்பை ஏற்கவேண்டும் என்றது. அதை அமெரிக்கா நிராகரித்தது. தற்போது இந்த முரண்பாட்டுக்கு இரு தரப்பும் தீர்வு ஒன்றை கண்டுள்ளதாக கூறினாலும், தீர்வு என்ன என்பதை வெளியிடவில்லை.
.
அது மட்டுமன்றி அமெரிக்கா அனுப்பும் அணுமின் சம்பந்தப்பட்ட பெருட்களை கண்காணிக்க அமெரிக்காவுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. அதாவது இந்த பொருட்கள் இந்தியாவின் அணு ஆயுதங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்காக. ஆனால் இந்தியா இந்த உரிமையையும் மறுத்திருந்தது. இதன் தீர்வும் என்ன என்பதை பகிரங்கப்படுத்தவில்லை.
.

ஒபாமா தாஜ்மகால் செல்ல திட்டம் இருந்திருந்தாலும், இவர் சவூதி தலைவரின் மரண நிகழ்வில் பங்குகொள்ள இருப்பதால் இரத்து செய்யப்பட்டது.