இந்திய பொதுத்தேர்தல் இன்று ஆரம்பம்

India

உலகின் மிக பெரிய சனநாயக நாடான இந்தியாவில் இன்று வியாழன் 2019 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தல் ஆரம்பமாகிறது. தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் மேதி தலைமயிலான ஆட்சியே மீண்டும் பதவிக்கு வரலாம் என்று கருத்தப்படாலும், தற்போதைய வெற்றியிலும் குறைவான வெற்றியே பா.ஜ. கட்சிக்கு கிடைக்கலாம்.
.
கணிப்பு வாக்கடுப்பு தவுகளின்படி, மொத்தம் 545 ஆசங்களில மோதி தரப்பு 273 ஆசங்களை வெல்லலாம் என்று கருதப்படுகிறது. அதாவது ஓரிரு மேலதிக ஆசனங்கள் மட்டும் கொண்ட பெரும்பாண்மை ஆட்சி அமையலாம். தமிழ்நாடு, கேரளா போன்ற தெற்கு மாநிலங்களில் பா.ஜ கட்சி தொடர்ந்தும் பின்தங்கி உள்ளதால் ஆட்சி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
.
மொத்தம் 29 மாநிலங்களிலும், 7 பிரதேசங்களிலும் இடம்பெறும் இந்த தேர்தல் ஏப்ரல் 11 ஆம் திகதி ஆரம்பித்து, 7 கட்டங்களாக இடம்பெற்று, மே 19 ஆம் திகதி முடிவடையும். தேர்தல் முடிபுகள் மே 23 ஆம் திகதி வெளிவரும்.
.
சுமார் 900 மில்லியன் மக்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல் 245 ராஜ்ஜிய சபா உறுப்பினர்களையும், 545 லோக் சபா உறுப்பினர்களையும் தெரிவு செய்யும்.
.