இந்திய யுத்த விமானம் சீன எல்லையில் தொலைவு

Assam

இந்தியாவின் நவீன யுத்த விமானம் ஒன்று சீன எல்லை பகுதியில் தொலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் Sukhoi SU-30 வகையான இந்த யுத்த விமானம் பயிற்சி ஒன்றின்போது தொலைந்து உள்ளது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் வடகிழக்கே உள்ள அசாம் மாநிலத்து Tezpur நகருக்கு வடக்கே சுமார் 60 km தூரத்தில் தொலைந்து உள்ளது.
.
உள்ளூர் நேரப்படி, செவ்வாய் காலை 10:00 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். சீன எல்லையை நோக்கி பறந்த இந்த விமானம் சுமார் 11:10 மணியளவில் தொலைத்தொடர்புகளை இழந்து உள்ளது.
.

இந்தியாவிடம் சுமார் 650 யுத்த விமானங்கள் இருப்பினும், அதில் சுமார் 1/3 பங்கு 40 வருட பழமையானவை. இவை USSR காலத்தில் சேவைக்கு வந்தவை. இன்று தொலைந்த விமானம் ஒரு நவீன வகை விமானம்.
.
இந்தியாவிடம் தற்போது 25 squadrons உள்ளன. இந்தியா பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ யுத்தம் செய்வதாயின், குறைந்தது 45 squadronsகளை கொண்டிருத்தல் வேண்டும்.
.