இந்திய வெள்ளத்துக்கு 1,019 பேர் பலி

MonsoonRain

இந்தியாவின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பொழிந்து வரும் மழையினால் பெருக்கெடுத்த வெள்ளத்துக்கு வெள்ளிக்கிழமை வரை 1,019 பேர் பலியாகி உள்ளனர் என்று இந்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது. அத்துடன் சுமார் 324,000 பேர் தமது வீடுகளில் இருந்து வெளியேற உதவிடப்பட்டு, வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டும் உள்ளனர். அங்கு மொத்தம் 33 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
.
அதிகம் பாதிப்பை அடைந்த கேரளா மாநிலத்தில் மட்டும் சுமார் 300 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஏனையோர் வேறு 6 மாநிலங்களில் பலியாகி உள்ளனர்.
.
பிரதமர் மோதி மேலும் 38 ஹெலிகளை மீட்பு பணிகளுக்கு அனுப்பி உள்ளார். அத்துடன் $70 மில்லியன் உதவியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
.
இந்த வெள்ளத்தால் சுமார் 80,000 ஏக்கர் பயிர்கள் அழிக்கப்படும், சுமார் 10,000 km நீளமான வீதிகள் பாதிக்கப்பட்டும் உள்ளன.
.
கேரளாவின் பெரிய விமான நிலையமான கோச்சி (Kochi International Airport) இந்த மாதம் 26 ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.

.