இந்திரா காந்தி உணவகம், இட்லி 5 ரூபா

IndiraCanteen

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்து பெங்களூர் மாநகரத்தில் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்திரா உணவக (Indira Canteen) நிலையங்கள். இந்த உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவு மிக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காலையில் இட்டலி 5 ரூபா மட்டுமே. தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடாத்திய அம்மா உணவகம் (Amma Canteen) வழங்கிய அரசியல் இலாபங்களை கண்காணித்த இந்திரா காங்கிரஸ் வாக்கு சேர்க்கும் நோக்கில் கர்நாடகாவில் ஆரம்பித்த உணவகமே Indira Canteen.
.
மூன்று வேளையும் இங்கு உணவு உட்கொள்ள ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு மொத்தம் 25 ரூபா மட்டுமே செலவாகும். அந்நகரில் சாதாரணமாக காலை உணவுக்கு மட்டுமே சுமார் 30 ரூபாய்கள் தேவைப்படும்.
.
இந்திரா உணவகத்தின் முதல் கிளையை இந்திரா காந்தியின் பேரன், தற்போதைய இந்திரா காங்கிரஸ் உப-தலைவர் ராகுல் காந்தி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திறந்துவைத்திருந்தார். அந்நகரில் மொத்தம் 300 இந்திரா உணவகங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
.
தற்போது கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சி தனது 2017-2018 வரவுசெலவில் 100 கோடி ரூபாய்களை இந்த உணவு திட்டத்துக்கு ஓதுக்கி இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.

வறியவர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க முனையும் இந்த உணவகத்து சேவைக்கும் smartphone App உண்டு.
.