இந்தோனேசியாவில் Lion Air விமானம் வீழ்ந்தது

LionAir

இந்தோனேசியாவில் Lion Air விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்துள்ளது. விபத்துக்கு உள்ளன இந்த விமானத்தில் 181 பயணிகளும், 2 விமானிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானம் 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த Boeing 737 MAX 8 வகை நவீன விமானமாகும்.
.
தலைநகர் Jakarta விமான நிலையத்தில் இருந்து திங்கள் காலை 6:20 மணிக்கு Pangkal Pinang நோக்கி பயணித்த இந்த விமானம் (Flight JT-610) சில நிமிடங்களில் தொடர்புகளை இழந்துள்ளது.
.
இந்த விமானம் முதலில் சுமார் 5,000 அடி உயரம்வரை சென்று, பின் கீழே சென்று, மீண்டும் மேலே சென்று இறுதியில் வீழ்ந்ததாக சில செய்திகள் கூறுகின்றன. இது கரையில் இருந்து சுமார் 15 km தூர கடலில் வீழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இந்தோனேசியாவின் மிக பெரிய விமான சேவையான இதனிடம் 115 விமானங்கள் உள்ளன.

.