இன்றுமுதல் Windows 10, இலவசம்

Windows10

நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த Windows 10 என்ற OS (Operating System) ஐ இன்று புதன் (2015/07/29) வெளியிடுகிறது Microsoft நிறுவனம். வழமைக்கு மாறாக இந்த OS பலருக்கு இலவசமாகவும் கிடைக்கவுள்ளது. தற்போது சட்டப்படியான Windows 7 Home, Premium மற்றும் Windows 8 OS கள் மூலம் இயங்கும் கணனிகள் மற்றும் smart phone கள் இந்த Windows 10 ஐ இலவசமாக இறக்கம் செய்யலாம்.
.
1995 ஆம் ஆண்டில் Windows 95 அடங்கலாக முன்னைய பல Windows OS களை பல நூறு டொலர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் Bill Gates உலகின் முதலாவது பணக்காரர் ஆனார். அனால் அந்த OS களை விட பல மடங்கு தரமாக Windows 10 ஐ இலவசமாக வழங்க போட்டிகள் காரணமாக Microsoft நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. தற்போதும் Windows கணணிகளே 80% இக்கும் அதிகமானோரால் பாவிக்கப்பட்டு வந்தாலும் Apple கணனிகள், Linux கணனிகள், Android smart phone கள் Windows இன் ஆதிக்கத்தை குறைக்க தொடங்கி உள்ளன.
.
புதிய Windows 10 இன் பலனை முழுமையாக அடைய உங்கள் கணணி touch screen ஐ கொண்டிருத்தல் அவசியம். அதேவேளை Windows 7 இல் இயங்கும் சில programs அல்லது applications Windows 10 இல் இயங்க மறுக்கலாம்.
.
2012 ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Windows 8 வெளியிட்டு இருந்தாலும் பாவனையாளர் அதை வெறுத்தமை காரணமாக Windows 9 என்ற OS வெளியிடுவதை Microsoft இடை நிறுத்தி இருந்தது.
.
அத்துடன் பிரபலம் குறைந்த Internet Explorer என்ற browser ஐயும் நிறுத்திய Microsoft அதற்கு பதிலாக Edge என்ற browser ஐ அறிமுகப்படுத்துகிறது.